Showing posts with label மானங்கெட்ட மனது. Show all posts
Showing posts with label மானங்கெட்ட மனது. Show all posts

Thursday, September 2, 2010

மானங்கெட்ட மனது…













உள்ளத்தின் அன்பை
உதட்டால் உணர்த்தத்
தெரியவில்லை எனக்கு!
ஊமையாகி அழுகிறது
உணர்வற்று மனது!
விரட்டிப் பார்த்தும்
விலக மறுக்கும் உன்
நினைவுகளுக்கு மத்தியில்
வெட்கங் கெட்டதாய்
விரைகிறது விரல்கள்
குறுஞ்செய்தி அனுப்பி
குசலம் விசாரிக்க!
என்ன நினைவு
இருக்கக்கூடும் உனக்கு?
என் கண்ணீர் கடலில்
கப்பல் விட்டு
களியாட்டம் நடத்துவதை தவிர?
தூக்கம் கெட்டு
காதல் வளர்த்தேன்
மானங்கெட்ட மனது
மறக்க மறுக்கிறது!