
நான் ஒன்றும் சீதையல்ல,
இராவணனால் கடத்தப்படுவதற்கு!
நான் ஒன்றும் நளாயினியல்ல,
நடத்தைகெட்ட கணவனுடன் வாழ்வதற்கு!
நான் ஒன்றும் கண்ணகியல்ல,
கணவனைக் கவனிக்காமல் இருப்பதற்கு!
நான் ஒன்றும் பாஞ்சாலியல்ல,
பலபேரை மணப்பதற்கு!
நான் இன்றைய யதார்த்தத்தில்
தொலைந்துபோகும் முகங்களிடையே
இருத்தலை ஸ்திரப்படுத்த முயலும்
ஒரு பெண்!
நன்றி கொற்றவை
No comments:
Post a Comment