Thursday, August 12, 2010

விடைபெறுகிறோம்!

“மீண்டும் வாழ்வோம்’’ என்னும் பத்திரிகையையும் வானொலி நிகழ்ச்சியையும் எம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து தம் சொந்த இடங்களை இழந்து “இடம்பெயர்ந்தவர்கள்” என்ற முத்திரையுடன் முகாம்களில் தஞ்சம் புகுந்த எம் தமிழ் சொந்தங்கள் பலருக்கும் பரிட்சையமான சொல் இந்த “மீண்டும் வாழ்வோம்”

இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் பணியாற்றி வந்த “மீண்டும் வாழ்வோம்” பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் வானொலியில் ஒலிபரப்பான குறிப்பிட்ட சில நிகழ்சிகளின் தயாரிப்பாளராகவும் சில நேரங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு உண்மையில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கை தேசிய சேவை, சூரியன் FM பிறை மற்றும் அநூர் FM போன்றவற்றில் ஆரம்பத்தில் எமது “மீண்டும் வாழ்வோம்” ஒலிபரப்புச் சேவை இடம்பெற்றிருந்தாலும் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை தேசிய சேவையில் மாத்திரம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. என்றாலும் 13.08.2010 உடன் தனது ஒலிபரப்பு சேவையை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது “மீண்டும் வாழ்வோம்.”

சூழ்நிலை காரணமாக ஊடகத்துறையை விட்டு அரசியல்துறைக்குள் பிரவேசித்திருந்தாலும் “மீண்டும் வாழ்வோம்” எனக்கு ஊடகத்துறையில் கொடுத்த அனுபவங்களை அளவிட முடியாது. அதை விட எம் இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவுக்கிடைத்த சந்தர்ப்பம் திருப்தியைக் கொடுத்தது.

எவ்வளவோ நேர அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றியிருந்தாலும் சக ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்பு காரணமாக சலிப்பற்று, களைப்பற்று பணிபுரிய முடிந்தது. எஸ். ரமணன் மற்றும் வியாஸா கல்யாணசுந்தரம் போன்ற இலங்கையின் ஊடகத்துறை ஜாம்பவான்களுடன் பணியாற்றியமை புதுத் தெம்பைக் கொடுத்தது. “மீண்டும் வாழ்வோம்” இல் பணியாற்ற வாய்பளித்த எஸ். ரமணன் அவர்களுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

நிகழ்ச்சித்திட்டம் (Project) முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் பிரிந்துவிட்டோம். என்றாலும் எம் ஒவ்வொருவாரின் மனதிலும் “மீண்டும் வாழ்வோம்” என்னும் சொல் நிலைத்து வாழும்.

சின்னச் சின்ன சந்தோசங்களும் சண்டை சச்சரவுகளும் கூடிக் குதூகலித்த நாட்களும் நெஞ்சில் கனத்து கண்ணீர்த் துளியாய் வெளிவர விடைபெறுகிறோம்!

2 comments:

  1. சுதந்திரப்பறவை!.

    தமிழ்மொழிபெயர்ப்பு சரியா பெல்லா?

    சில பிரிவுகளும், முடிவுகளும் மற்றுமொரு ஆரம்பத்தின் தொடக்கப்புள்ளியே. மிக இயல்பாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தங்களின் குரலும், மொழியை கையாழுகிற விதமும் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ‘பிரவீன்’ என்கிற புருஜோத்தமன் தங்கமயில்.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி பிரவீன். உங்கள் மொழி பெயர்ப்பு ரொம்ப சரியானதே! ஒன்று மட்டும் குறைகிறது “செல்வி” சுதந்திரப் பறவை!

    உண்மை தான் ஆதி என்றால் அந்தம் உண்டு, ஆண்டவன் படைப்பும் அப்படித்தானே, இருந்தாலும் இன்டர்நியூஸ் மூலமாக உங்களைப் போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete