Wednesday, November 6, 2013

ஒன்லைன் சில்மிசங்களை வெளிக்கொணர்ந்த 10 வயது ஸ்வீட்டி! (வீடியோ)





வெப்காம் முன்னிலையில் 10 வயது சிறுமியை, அவளது உடைகளை அகற்றக் கோரியும் அதற்கு பணம் தரத் தயாரெனவும் பாலியல் சில்மிசங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆண்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள் டச்சு ஆய்வாளர்கள். 

இதற்கென பிலிப்பைன்ஸைச் சேர்ந்த (!) 10 வயது சிறுமி ஸ்வீட்டியை 10 வார கால ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளார்கள் இந்த ஆய்வாளர்கள்.


சிறுவர் உரிமைகளுக்கான நிறுவனம் 'Terre des Hommes'  இதற்கென பொய்யானதொரு ப்ரொபைலினைத் தயாரித்து அதற்கு ஸ்வீட்டி எனப் பெயரிட்டு online chat room இல் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. 


ஸ்வீட்டி என பெயரிடப்பட்ட 10 வயது சிறுமி, பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் ஆண்களுடன் இரண்டு வாரகாலம் உரையாடலில் ஈடுபட்டு அவர்களை அடையாளம் காண உதவியிருக்கிறாள்.


இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஆண்கள் அவளுடன் பாலியல் நாட்டங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.


இந்நிலை, சிறுவர்கள் பலரும் தற்போது இணையப்பாவனையில் ஈடுபட்டிருப்பதை கவலைக்குரியதாக்கியுள்ளது.


உண்மை நிலவரம் என்னவென்றால், இதில் ஸ்வீட்டி எனப் பெயரிடப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட கணிப்பொறி வடிவமே! 


 

 

 

 

 

 

 

 

 

 தகவல்: பி.பி.சி.


No comments:

Post a Comment