Sunday, February 16, 2014

கொலம்பசின் வரைபடங்கள்.... ஓர் குறிப்பு



கொலம்பசின் வரைபடங்கள் வாசித்து முடித்தாயிற்று..!

புத்தகத்தை மூடிய போதே, மனசுக்குள் ஏதோ மரண வலி புகுந்து கொண்டது.

எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையுடன் கசப்பான கடந்தகால நினைவுகள் கண்கலங்க வைத்தன.

வரிக்கு வரி வலிகளும்... சபிக்கப்பட்ட சனங்களின் அவலங்களும்.. ஆறிய ரணங்களைக் கீறிப்பார்க்கின்றன.

பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த அநீதியும், இரகசியமாக நடைமுறையில் இருந்த நீதியும், அமைந்திருந்த அந்நாட்களில்... இனங்களுக்குள்ளேயே முரண்பட்டுப் பிரிந்து, பிரிதொரு இனத்தை எதிர்கொள்ள இயலாமல் தோற்றுப் போன எதார்த்தம் தான் இயலாமையின் உச்ச கட்டமாய்த் தெரிகிறது.

உயிர் பிழைக்க வரைபடங்களைத் தேடிய சபிக்கப்பட்ட சனங்களில், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக யாரைச் சொல்வது?

பிழையான வரைபடங்களுடன் சரியான பயணங்களைச் செய்தவர்களையா?

அன்றியும் யாரைச் சாடுவது..?

சரியான வரைபடங்களுடன் பிழையான பயணங்களைச் செய்தவர்களையா?

நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசை அறியாத பயணிகளாய், அகதிகளாய்த் திகைத்து நிற்கையில், வாழ்க்கைப் பயணங்களுக்காய் மனதில் தோன்றி மறைந்திருக்கும் ஆயிரமாயிரம் கொலம்பசின் வரைபடங்கள

முடிந்தால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.


கொலம்பசின் வரைபடங்கள்.


 

No comments:

Post a Comment