தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோரின் கருணை மனுக்களை நீண்டகாலம் ஜனாதிபதி கிடப்பில் போட்டதைக் காரணம் காட்டி தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்யும் அதிகாரத்தை மாநில அரசின் கைகளில் விட்டது உச்சநீதிமன்றம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் 432 மற்றும் 433-ன்படி தண்டனை மாற்றுதல் அல்லது வழக்கை தள்ளுபடி செய்தல் போன்றவற்றில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தான் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.
இந்நிலையில், தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால் குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி மத்திய அரசின் கருத்தைக் கோருவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இந்த விடயம் தான் இப்போது வில்லங்கமாகியிருக்கிறது.
குற்ற விசாரணை முறை சட்டம் 435ஆவது பிரிவின்படி மத்திய அரசின் ஒப்புதல் (concurrence) இல்லாமல் இப்படி தண்டனை குறைப்பு அல்லது மாற்றத்தை ஒரு மாநில அரசு செய்ய முடியாதாம்.
இருந்தாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான குழு, தண்டனை மாற்றம் அல்லது குறைப்புக்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றுதான் கூறியுள்ளது.
குற்ற விசாரணை முறை சட்டம் 435-ன் படி, தண்டனை மாற்றம் அல்லது குறைப்பு செய்ய 6 பேர் கொண்ட அறிவுரைக் குழு அமைக்கப்படல் வேண்டும். இந்த அறிவுரைக் குழு, தண்டனை மாற்றம் அல்லது குறைப்பை மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் பின்னர், மாநில அரசானது இந்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப்படியான "உரிய" வழிமுறைகளைக் கடைப்பிடித்த பின்னர் தான் மாநில அரசு...அதாவது தமிழக அரசு தன் தீர்மானத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.
இந்த நடைமுறை சரிவரப் பின்பற்றப்படாமை தான் தற்போதைய சிக்கலுக்கு காரணம் எனப்படுகிறது.
சட்டத் தகவல் - ஓன்இந்தியா
No comments:
Post a Comment