Friday, March 7, 2014

வீரியம் காட்டு... விடியலுக்காய்!



















சமையலறையிலும் குழந்தை வளர்ப்பிலும்
கருத்தூன்றிப் போயிருந்தோம்...

பாலியல் பண்டமாய் படுக்கையறையிலே
கட்டுண்டு கிடந்திருந்தோம்...

பஞ்சப்புலவனின் பாட்டினால்தானே பாரிலெம்
பங்கினை உணர்ந்துகொண்டோம்...

சுதந்திரக் கதிரைக் கண்டதாலன்றோ
காற்கட்டுத் தகர்த்தெறிந்தோம்...

எல்லாம் கிடைத்ததாய் ஏக்கப்பெருமூச்சு
ஏனடி கண்ணே..?

எல்லைக் கோட்டுக்குள் இன்னும் நீ
நிற்கிறாய் பாரடி பெண்ணே!

விளம்பரப் பிண்டமாய் விலைமாதாய்
இன்னும்தான் விலைபோகிறாய்...

வீரிட்டெழுந்து வீரியம்காட்டு விடியும்
நாளைய பொழுதுனக்காய்!

No comments:

Post a Comment