Tuesday, February 2, 2010

ஊருக்குப் போயிருந்தேன்...

கனநாள் கழித்துக் கிடைத்த
விடுமுறையொன்றில்
ஊருக்குப் போயிருந்தேன்!

அங்கு எதுவுமே எனக்கு
முன்பு சந்தோசமளித்தது போன்று
இருக்கவில்லை!

பிள்ளையாரடிச் சந்தியும்
புளியடிக் கோயிலும்
வெறிச்சோடிக்கிடப்பதைக் கண்ட எனக்கு

யுத்த கால இருட்டுக்குள்
எங்கள் ஊரார் வாழ்வு
கறுத்துக் கிடப்பது தெரிந்தது!





ஆசையோடு நான் சந்திக்கும்
முந்தைய நாளைய என்
பாடசாலை சிநேகிதன்
நீயில்லாத இடைவெளியில்
மரக்காலொன்றும்
ஊன்றுகோலொன்றும்
பரிசாகக் கிட்டியதாகச் சொல்லி
என்னைக் கட்டியணைத்தான்!

நன்றி
ச. டினேசன்

1 comment:

  1. ஊருக்கு போன சங்கதி,,,, இவ்வளவு உருக்கமானதா.!

    ReplyDelete