
''அகதி முகாம்''
ஓர் பொதுவான
சொல்தான் இதுவும்...
இன்று முகவரிகள் தொலைத்த
தமிழர்களின் வாழிடமாக!
திக்கற்றவனுக்குத் துணை
தெய்வமாம்....
திக்குகளையே
தொலைத்தவனுக்குத் துணை
முகாமாம்...!
அரிசிக்கே
வரிசையில் நின்று
பழக்கப்படாதவன் இன்று
வரிசையில் நிற்கிறான்
அவசரத்திற்காக...
முகம் கழுவ
முண்டியடிக்கிறான்
முடியவில்லை போலும்
மூச்சுத் திணறுகிறான்...
அதிகாலை நின்றால்
அந்தி மாலைதான்
முடியுமாம்...
வாழ்க்கையைத் தொலைத்தவன்
தேட முடியாது...
வயது போனவன்
வாழவும் முடியாது
வறுமையில் இருந்தவனுக்கு
வசதியான வாழ்வாம்
வயிற்றை நிரப்புகிறான்!
அகதி முகாமை
அல்லல்படும் எங்களுக்கு
ஆண்டவன் தந்த
அவசர பரிசு என்று
எடுத்துக்கொள்வோம்!
No comments:
Post a Comment