Tuesday, September 24, 2013

ஊசிப்போன வடைகளும் உள்ளார்ந்த அழகும்!



உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் மைக்கல் ஆஞ்சலோ பற்றி அறிந்திருப்பீர்கள்.

அவர் ஒரு நாள் பளிங்குக் கற்கள் விற்கும் கடைக்குச் சென்றார்.

கடைக்கு முன்னால் பெரிய பாறையொன்று கிடப்பதைக் கண்டார்.

அதன் விலை என்னவென கடைக்காரரைக் கேட்டார்.

இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை நீங்கள் நகர்த்திச் சென்றாலே போதும், பணம் ஏதும் தேவையில்லை என்றுவிட்டார், கடைக்காரர்.

வந்தவர் எவரும் இதை வாங்கிச் செல்ல விரும்பவில்லை, தாங்கள் இதை எடுத்துச்சென்றால் சந்தோஷம், என்றார் மேலும்.

அந்தப் பாறையைக் கொண்டு சிலையொன்றைத் தயாரித்ததும், கடைக்காரருக்கு அழைப்பு விடுத்தார்.

இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டதும் தனது தாயின் மடியில் கிடக்கும் காட்சி சிலையாக உருப்பெற்றிருப்பதைக் கண்ணுற்ற கடைக்காரருக்கு ஆச்சரியம்.

நான் கண்டதிலேயே மிக அழகான சிற்பம் இது. இதற்கான பளிங்குப்பாறை எங்கே கிடைத்தது, என்று கேட்டார்.

நீங்கள் இலவசமாக எடுத்துச்செல்லக் கூறிய அந்தப் பாறைதான் இது, என்றார் மைக்கல் ஆஞ்சலோ.

உலகப் பிரசித்தி பெற்ற சிற்பங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது. (ஒரு மனநோயாளி அதனை உடைத்தெறிந்து பிரபலமாக முயன்றது வேறு கதை!)


ஒரு பயனற்றுக்கிடந்த பாறையில் இயேசுவையும் மரியாளையும் காண அவரால் மட்டுமே முடிந்தது.

அழகற்ற பாறையின் பயனை அறிய ஓர் உள்ளார்ந்த அறிவுக் கூர்மை வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அண்மையில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், கடையில் கிடைக்கும் வடைகளில் நல்லதெது, ஊசிப்போனதெது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

வாங்கிய பின்னர் தானே தெரிகிறது ஊசிப்போன வடையென, என்றார்!

கடைகளில் கிடைக்கும் வடைகளை சாப்பிட்டுப் பார்த்து வாங்கும் வசதி இல்லையே, எனவும் அங்கலாய்த்துக்கொண்டார்.

(அவர் வடையென ஒப்பிட்டது பெண்களை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

நண்பரே,

அழகைப் பார்த்து மட்டுமே தெரிவு செய்ய சகலருக்கும் முடியும். அதன் பின்னர் வருத்தப்படுவது அவர் தலைவிதியாகக்கூட மாறிவிடலாம்!

உள்ளார்ந்த அழகை ஆராய்ந்து அறியும் பக்குவம் அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை.


மைக்கல் ஆஞ்சலோ போல் முடிந்தால் நீங்களும் முயன்று பாருங்கள்!!! வாழ்த்துக்கள்!!! 

1 comment: