Wednesday, October 2, 2013

வானங்களுக்கு அப்பால்...!


 இனி அழுவதற்கில்லை எனுமளவிற்கு கண்ணீர் தீர்ந்த அந்த நேரம், வாழ்க்கையின் மையமாய், மகிழ்ச்சியாய் நினைத்தவொன்று கைநழுவிப் போன நேரம், கடைசித் துளிகள் விழுமுன் நண்பரின் நினைவு வந்து அழைப்பை ஏற்படுத்தி அவரிடமும் அழுது முடிக்கையில்....



நிதானமாய் அவர், மகிழ்ச்சியும் துன்பமும் உன்னில் தான் இருக்கிறது, கிடைப்பதால் நன்மையில்லை என்பதால் கைநழுவியதாய் நினை என்றார்.




வானம், வாழ்க்கை, அழுகை, கண்ணீர், கவலை, முடிவு, தனிமை, மகிழ்ச்சி, நிதானம்

அன்றோடு முடிந்தது என்றே தோன்றியது. முடிவெல்லாம் மரணத்தில் தான் என்றாலும், முடிவென்பது முழுமையாய் மனது எதையோ ஏற்றுக்கொண்டுவிட்டது என்றே அர்த்தப்படுகிறது.
முழுமையைத் தேடுவது மரணத்தைத் தேடுவதற்குச் சமம்! வாழ்வில் மரணம் தான் முற்றுப்புள்ளி.
முரண்பாடும் இங்கே தான், மனது என்பது முழுமை விரும்பி ஆயிற்றே!!!

வாழும் வரை நீளும் பிரச்சினைகளுக்கு காற்புள்ளி, அரைப்புள்ளிகளை இட்டு, இழுத்துச்செல்கிறோம். ஒரு முற்றுப்புள்ளியைப் பயன்படுத்த பலராலும் முடிவதில்லை (மரணத்தை விரும்பாதவர்களால்).



வானம், வாழ்க்கை, அழுகை, கண்ணீர், கவலை, முடிவு, தனிமை, மகிழ்ச்சி, நிதானம்
என்றாலும், வானங்களுக்கு அப்பாலும் வானங்கள் இருப்பதாய் நம்பி முடிவுகளுக்கு அப்பால் மேலுமொரு முடிவிற்காய்... முழுமைக்காய் காத்திருக்கும் மனது!!! 

No comments:

Post a Comment